இரட்டை குழந்தைகளுடன் நயன், விக்கி கொண்டாடிய முதல் கிறிஸ்துமஸ்..! ட்ரெண்டிங் ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது.

Advertising
>
Advertising

அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

பின்னர் 2022-ஆம் வருடம் ஜூன் 9-ஆம் தேதி, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் நடந்தது. இதனை அடுத்து விக்கி - நயன் ஜோடி, சமீபத்தில் தங்கள் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தனர். வாடகைத்தாய் மூலம் அவர்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்ட நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  இது தொடர்பான வீடியோவில் அவர்களது மகன்கள் இருவரும் சிவப்பு நிற உடை அணிந்திருக்கின்றனர். நயனும் விக்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்பத்தும் நிலையில் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கின்றனர்.

இது தொடர்பான பதிவில், விக்னேஷ் சிவன், “மிகுதியான அன்புகள்! கனவுகள் ஈடேறும் வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தரவேண்டும் என கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்!” என பதிவிட்டுள்ளார்.

இரட்டை குழந்தைகளுடன் நயன், விக்கி கொண்டாடிய முதல் கிறிஸ்துமஸ்..! ட்ரெண்டிங் ஃபோட்டோஸ்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara vignesh shivan christmas celebration with twin babies

People looking for online information on Nayan wikki, Nayanthara Vignesh Shivan, Nayanthara Vignesh Shivan Babies, Nayanthara Vignesh shivan christmas will find this news story useful.