நடிகர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் தங்கியுள்ளனர்.

Also Read | சிவகார்த்திகேயன் - பவர் ஸ்டார் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் ஃபோட்டோ!
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தனர்.
புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் விக்னேஷ் சிவன் & நயன்தாரா சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.
தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், நயன்தாரா விக்னேஷ் சிவனை தனது மொபைல் போனில் போட்டோ எடுப்பதும், விக்னேஷ் சிவன் நயன்தாராவை போட்டோ எடுப்பது போன்ற போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
நயன்தாரா விரைவில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார். மேலும் அவர் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மறுபுறம், விக்னேஷ் சிவன் இப்போது அஜித்துடன் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.
Also Read | பிரபல போட்டோகிராபருடன் சேர்ந்து நஸ்ரியா நடத்திய போட்டோஷூட்.. செம்ம காஸ்டியூம்ல!