SPAIN தீவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. அந்த 5 STAR HOTEL ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா & விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டு தீவில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | ராம் சரண் நடிக்கும் RC15.. ஷூட்டிங் எப்போ? எந்த ஊர்ல? ஷங்கர் கொடுத்த அதிரடி அப்டேட்!

சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதாக அறிவித்தார்

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.
உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌

பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் நயன்தாரா & விக்னேஷ் சிவன் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்றுள்ளனர்.‌ ஐபிஜா தீவில் உள்ள வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான  சிக்ஸ் சென்ஸஸில் தங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

இந்த சிக்ஸ் சென்ஸஸ் விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 45,000 ரூபாய் ஆகும்.

Also Read | பிரபல டிவி சேனலில் தமிழில் ஒளிபரப்பாகும் KGF Chapter 2.. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan at Six Senses Ibiza Spain Island

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan, Spain Island, Vignesh shivan will find this news story useful.