விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Also Read | "சூர்யாவோட அடுத்த பட டைரக்டர் இவர் தான்.. இன்னும் ஒரு வாரத்துல"..கார்த்தி கொடுத்த EXCLUSIVE அப்டேட்!
சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
பின்னர் பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,"இயற்கை மினுமினுப்பு sacrada familia..வர்ணம் பூசப்பட்ட கண்ணாடியின் வழியே பரவிய இயற்கையான சூரிய ஒளி, நான் முத்தமிடும் முன் அது முத்தமிட்டது! இந்த இடத்தின் ஒளி, மனநிலை, அசல் சூழல்!
எங்கள் இருவருக்கும் இதுவரை உணராத அனுபவம்!
இந்த #wikkiclicks #SacradaFamilia தொடரில் நான் கிளிக் செய்து ரசித்த சில படங்களை பகிர்கிறேன்." என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி நயன்தாராவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.
Also Read | தனது கணவரின் பிறந்தநாள்.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய காஜல் அகர்வால்!