நயன்தாரா.. கேன்ஸ் விழாவில் பங்கேற்கிறாரா..?.. கல்யாண வேலையில் பிஸியா.? உண்மை என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, இன்று (மே 17) பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் பகுதியில் ஆரம்பமானது.

Advertising
>
Advertising

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ், மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் திரைப்படங்களும்  திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவும் உள்ளனர்.

கேன்ஸ் விழாவில் நயன்தாரா?

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியாவின் சார்பில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. ஆனால், இதுகுறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், ஜூன் இரண்டாம் வாரத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால், இதற்கான வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வியப்பில் ஆழ்ந்த விக்னேஷ் - நயன்

அப்படி ஒரு சூழ்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதாக வெளியான தகவல், எங்கிருந்து ஆரம்பித்தது என்பதே தெரியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல, திருமண ஏற்பாடுகளில் இருப்பதற்கு நடுவில், இப்படி ஒரு செய்தியைக் கேட்டு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வியப்பில் ஆழ்ந்தும் போயுள்ளனர்.

விக்னேஷ் சிவன் கடைசியாக இயக்கி இருந்த 'காத்துவாக்குல் ரெண்டு காதல்' திரைப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara surprised with cannes film festival news

People looking for online information on Cannes Film Festival, Marriage, Nayanthara, Vignesh shivan will find this news story useful.