நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியான CONNECT படத்தின் ஹாரர் டீஸர்.. சும்மா மிரட்டுதே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிக்கும் Connect படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. வெளியான மிரட்டலான MAKING GLIMPSE வீடியோ! தலைவர் லுக் 🔥

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.  படம் உருவாகி வருகிறது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சத்யராஜ், நயன்தாரா, அனுபம் கேர் ஆகியோர் டீஸரில் தோன்றியுள்ளனர். ஹாரர் வகைமையில் இந்த டீஸர் அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. திருச்சி & தஞ்சாவூர் ஏரியா ரிலீஸ் தொடர்பான அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara SathyaRaj Connect Movie Teaser Released

People looking for online information on Connect, Connect Movie Teaser, Nayanthara, Sathyaraj will find this news story useful.