நயன்தாரா - சமந்தாவின் கலக்கலான DANCE.. "காத்துவாக்குல ரெண்டு காதல்" பாடலின் கலர்ஃபுல்லான GLIMPSE VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Advertising
>
Advertising

Also Read | KGF: அடுத்த சம்பவம் இன்னும் பயங்கரமா இருக்கும்.. உருவாகும் KGF-3..! மிரட்டல் அப்டேட்

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் Two Two எனும் பாடலின் முன்னோட்ட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா உடன் சமந்தா போட்டி போடுவது போலவும், இருவருக்கும் இடையில் விஜய் சேதுபதி மாட்டிக்கொள்வது போலவும் வீடியோ அமைந்துள்ளது.

Also Read | போடு வெடிய..KGF Chapter 2 பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனை..! வெளியான OFFICIAL தகவல்

நயன்தாரா - சமந்தாவின் கலக்கலான DANCE.. "காத்துவாக்குல ரெண்டு காதல்" பாடலின் கலர்ஃபுல்லான GLIMPSE VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Samantha Vijay Sethupathi Two Two song Glimpse Video

People looking for online information on KVRK movie, Nayanthara, Samantha, Two Two song, Two two two song glimpse, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.