நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. ஷூட்டிங்-ல் எல்.ஆர்.ஈஸ்வரி. - 80 வயதில் என்ன எனர்ஜி பாருங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் வீடியோ தற்போது வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளனர். அண்மையில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து தீபாவளிக்கு இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படப்பிடிப்புக்கு விசிட் அடித்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, உற்சாகமாக நடனமாடும் இந்த் வீடியோ ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. 

இதை பதிவிட்ட ஆர்.ஜே.பாலாஜி, ''பெருமைக்குரிய எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா. 80 வயதில் அவரது எனர்ஜியை பாருங்கள். எங்கள் படத்தில் அவர் பாடி, நடித்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் வீடியோ | nayanthara rj balaji's mookuthi amman shooting spot video goes viral ft LR Eswari

People looking for online information on L.R.Eeswari, Mookuthi Amman, Nayanthara, RJ Balaji will find this news story useful.