இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றாக Behindwoods திகழ்கிறது.
அரசியல், உடனுக்குடனான தினசரி நிகழ்வுகள், வணிகம், விளையாட்டு மற்றும் சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த, பிழைகள் அற்ற, அதிவேகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நம்பகமான கன்டன்களையே, மாதந்தோறும் சுமார் 4 கோடி பார்வையாளர்களுக்கு Behindwoods மீடியா தளம், தங்களது பயிற்சி அளிக்கப்பட்ட தரமான 400 ஊழியர்களைக் கொண்டு EXCLUSIVE-வாக வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.
திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் Behindwoods Gold Digital & TV Awards ஆகிய விருது நிகழ்வுகள் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.
அவற்றின் ஒரு அங்கமான சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration நிகழ்வு கட்ந்த 2023, ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பல்லாயிரம் பார்வையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நெற்றிக்கண், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான் மற்றும் ராஜா ராணி ஆகிய திரைப்படங்களுக்காக கடந்த பத்தாண்டுகளில் சிறந்த நடிகை விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை நயன்தாராவுக்கு முன்னணி இயக்குனர் மணிரத்னம் வழங்கி சிறப்பித்தார்.
இது நிகழ்வில் பேசிய நடிகை நயன்தாராவிடம் VJ மணிமேகலை விக்கி - நயன்தாரா தம்பதியரின் குழந்தைகள் பெயரை ரிவீல் செய்யச் சொல்லி கோரினார். ரசிகர்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அதை ஏற்று, இந்த பிஹைண்ட்வ்வுட்ஸ் கோல்டு ஐகான் மேடையில்தான் நயன்தாரா முதன் முதலில் தங்கள் குழந்தைகளின் பெயரை ரிவீல் செய்தார். அதற்கு முன்பு பேசிய நயன்தாரா இது நிச்சயமாக விக்கி சொல்ல வேண்டியது. எனினும் விக்கி கோபித்துக் கொள்ள மாட்டார், எங்கள் குழந்தைகளின் பெயரை நான் அறிவிப்பதில் அவர் ஆட்சேபணம் தெரிவிக்க மாட்டார் என்பதால் இங்கு அறிவிக்கிறேன்.
என்னுடைய முதல் பையன் பெயர் உயிர் ருத்ரோநீல் N ஷிவன் மற்றும் என்னுடைய இரண்டாவது பையன் பெயர் உலக் தெய்விக் N ஷிவன் என்று நடிகை நயன்தாரா முதன் முதலில் ரிவீல் செய்தார். இதை கேட்ட அரங்கமே ஆர்ப்பரித்தது.