திருமணத்துக்கு பின் நடிப்பை தொடரும் NAYANTHARA .. முதல் படமே இதான்.. தெறி அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் நயன்தாராவுக்கு , கடந்த ஜூன் 9ஆம் தேதி விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது.

Nayanthara resumes movie shoot post marriage update
Advertising
>
Advertising

இந்த திருமணத்தை தொடர்ந்து இவர்கள் கோயில்கள், மறுவீடு, தேன்நிலவு உள்ளிட்ட அடுத்தடுத்த சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட்டிருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனிடையில் நடிகை நயன்தாரா குறித்த அடுத்த கட்ட தகவல்கள் நமக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கின்றன. 

Nayanthara resumes movie shoot post marriage update

ஆம், நடிகை நயன்தாரா தமது திரை வாழ்க்கையை மீண்டும் தொடரக்கூடிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதன்படி நயன்தாரா தம் அடுத்த திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முதற்கட்டமாக ஷாருக்கான் - அட்லி இணையக் கூடிய ஜவான் திரைப்படத்திற்காக நேற்று மும்பையில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்திலான காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா உருக்கமான பல காட்சிகளில் வசனம் பேசி முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருப்பார்.

இந்நிலையில் தற்போது ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா இணைந்திருக்கிறார் என்கிற தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கிறது. 

Tags : Nayanthara

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara resumes movie shoot post marriage update

People looking for online information on Nayanthara will find this news story useful.