எர்ணாகுளம்: நயன்தாரா - பிரித்வி ராஜ் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
பிரேமம்
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். 2 வருடங்கள் கழித்து வெளியான பிரேமம் (2015) தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர் திரையுலகில் நுழைந்து 8 வருடங்களே ஆன நிலையிலும் அவர் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார். இவர் திரையுலகில் நுழைந்து 8 வருடங்களே ஆன நிலையிலும் அவர் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார்.
கோல்ட்
அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார்.
பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
GOLD - ராஜேஷ் முருகேசன்
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் கோல்ட் படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்றும் பிரேமம், நேரம் பட இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் தான் இசையமைப்பதாகவும் முகநூலில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என முகநூலில் அறிவித்திருந்தார்.
DON Movie Sivakarthikeyan | டான் ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயன் காலையிலேயே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
வலிமை படத்தின் புதிய ரிலீஸ் தேதி இது தானா? தியேட்டர் உரிமையாளர்கள் சொல்வது என்ன? முழு தகவல்!