செம்ம.. பிரபல தமிழ் டிவி சேனலில் வருது .. நயன்தாரா நடிச்ச O2 திரைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து உருவான திரைப்படம் ‘O2’.

Advertising
>
Advertising

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்ற நடிகை நயன்தாரா, ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாகவும் விளங்கி வருபவர். முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நாயகியாக நடித்த நயன்தாரா அண்மைக்காலங்களில் தனித்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றுள் பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படித்தான், அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நயன்தாரா நடித்த O2 திரைப்படம் நேரடியாக வெளியானது.

படத்தில் சுவாசப் பிரச்சினை இருக்கும் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக வரும் நயன்தாரா, சிறுவனின் பிரச்சினைக்காக - அதாவது சிகிச்சைக்காக சொகுசு பேருந்தில் வெளியூர் பயணம் செல்ல, அதே பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளால் தன் மகனுக்கு வரும் ஆபத்தை எதிர்க்கிறார்.

அதாவது சுவாச பிரச்சனை உள்ள நயன்தாராவின் மகனுக்கு எந்நேரமும் செயற்கையாக ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டே இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் செல்லும் பேருந்து மண்ணுக்கடியில் இயற்கை பேரிடரால் சென்றுவிட, அப்போது அந்த பேருந்தில் இருக்கும் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நயன்தாராவின் மகனிடம் இருக்கும் ஆக்சிஜனை பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மனிதர்கள் சர்வைவல் காலகட்டங்களில் மனிதநேயத்தை மறந்து விடுவார்கள்.. சாதாரண மனிதர்கள் கூட அப்போது எந்த எல்லைக்கும் சென்று அசுரத்தனமாக சண்டையிடுவார்கள் என்கிற நவீன கதையாடல் முறையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பரவலாக பேசப்பட்டது.

இப்படத்தில் நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபல சிறுவன் ரித்து என்கிற ரித்திக் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் இப்படம் தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara O2 to stream in Popular tamil tv channel

People looking for online information on Nayanthara, O2, Vijay Television will find this news story useful.