ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்.. வெளியான டெரர்ரான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் குட் லக் ஜெர்ரியின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சூப்பர் பாடல்கள்! முழு தகவல்

இந்த குட் லக் ஜெர்ரி படம் ஒரு கருப்பு நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும். கோலமாவு கோகிலா படமும் கருப்பு நகைச்சுவை படமாகும்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்களை ஜான்வி கபூர் சிலநாட்களுக்கு முன் பகிர்ந்தார். அதில் ஒரு போஸ்டரில் அவர் கையில் துப்பாக்கியுடன் யாரோ ஒருவரை நோக்கி சுடுவது போல போஸ்டர் அமைந்தது.

சித்தார்த் சென்குப்தா இயக்கிய இந்த "குட் லக் ஜெர்ரி" படத்தில் ஜான்வி கபூர் ஜெர்ரி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் நயன்தாரா இந்த பாத்திரத்தில் கோகிலா எனும் பெயரில் நடித்தார்.

இப்படத்தில் தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட், நீரஜ் சூட் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜூலை 29 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இப்படம் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. கேங்ஸ்டர்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக ஜான்வி கபூர் போஸ்டரில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தை இந்தியில் லைகா நிறுவத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராய் தயாரித்துள்ளார்.

இந்த படம் போக, வருண் தவானுக்கு ஜோடியாக நித்தேஷ் திவாரி இயக்கும் "பவால்" படத்திலும் ஜான்வி நடித்துள்ளார்.

ஜான்வி கபூரின் நடிப்பில் அவரது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் மிலி படமும் தற்போது தயாராகி வருகிறது. 

மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'விக்ரம்' படத்தை ஏன் தியேட்டர்ல போய் பாக்கல? அல்போன்ஸ் புத்திரன் சொன்ன காரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Kolamavu Kokila Remake Janhvi Kapoor Good Luck Jerry Poster

People looking for online information on Good Luck Jerry Movie, Good Luck Jerry Movie Poster, Janhvi Kapoor, Janhvi Kapoor Good Luck Jerry Poster, Kolamavu Kokila Hindi Remake, Nayanthara will find this news story useful.