ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்.. பிரபல OTT-ல எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜான்வி கபூர் தனது வரவிருக்கும் படமான குட் லக் ஜெர்ரியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “இவன் படம்லாம் நடிக்கிறானா..? ஹீரோயின் நயன்தாரான்னுவான் போல” - ரித்து meets வீரா.. செம ப்ரோமோ

இந்த குட் லக் ஜெர்ரி படம் ஒரு கருப்பு நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்களை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு போஸ்டரில் அவர் கையில் துப்பாக்கியுடன் யாரோ ஒருவரை நோக்கி சுடுவது போல உள்ளது. மற்றொரு போஸ்டரில் ஜான்வி கபூர் மறைந்திருப்பதைப் போல் உள்ளது. இந்த போஸ்டர்களில் ஜான்வி கபூர் மூக்குத்தி அணிந்துள்ளார்.

சித்தார்த் சென்குப்தா இயக்கிய குட் லக் ஜெர்ரி படத்தில் ஜான்வி ஜெர்ரி எனும் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட், நீரஜ் சூட் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜூலை 29 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இந்தியில் லைகா நிறுவத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராய் தயாரித்துள்ளார்.

இந்த படம் போக, வருண் தவானுக்கு ஜோடியாக நித்தேஷ் திவாரி இயக்கும் பவால் படத்திலும் ஜான்வி நடித்துள்ளார். ஜான்வி கபூரின் நடிப்பில் அவரது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் மிலி படமும் தற்போது தயாராகி வருகிறது. இதில் ஜான்வி மற்றும் மனோஜ் பஹ்வா மகள் மற்றும் தந்தையாக நடித்துள்ளனர். இப்படத்தில் சன்னி கவுஷலுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Gal Gadot கூட நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.. SUPER போட்டோவை வெளியிட்டு அப்டேட் கொடுத்த ஆலியா பட்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Kolamavu Kokila Hindi Remake Janhvi Kapoor Good Luck Jerry

People looking for online information on Good Luck Jerry, Janhvi Kapoor, Janhvi Kapoor Good Luck Jerry, Kolamavu Kokila, Kolamavu Kokila Hindi Remake, Nayanthara, Nayanthara Kolamavu Kokila, Yogi Babu will find this news story useful.