ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, 'தளபதி'க்கு பிறகு ரஜினியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன் படி 'தர்பார் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இன்று முதல் (ஏப்ரல் 23) கலந்துகொள்ளவிருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்துடன் அவர் ஏற்கனவே 'சந்திரமுகி', 'குசேலன்' ஆகிய படங்களிலும், 'சிவாஜி' படத்தில் ஒரு பாடலிலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.