ஆஹா.. நயன் & விக்கி தம்பதி.. LATEST ஃபோட்டோ.. சுத்திப் போட்டுக்கும் ரசிகர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர்.

Advertising
>
Advertising

குடும்ப உறவினர்கள், திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாருக்கான் என ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தை தொடர்ந்து, பின்னர் இருவரும் தேனிலவு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், அவரது மனைவி நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புதிய ஃபோட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய நான் பிழை பாடலின் வரிகளான 'நான் பிறந்த தினமே' என்கிற வரியை குறிப்பிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒரு புகைப்படத்தை பகிர, ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் விக்கி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்ற நான் பிழை பாடலில் இருந்து நினைச்சா தோணும் இடமே என்கிற வரிகளை கேப்ஷனாக பதிவிட்டு விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை பதிவிட்டார்.

சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் இந்த புகைப் படங்களுள் ஒன்றில் நயன்தாராவின் தோள் மீது சாய்ந்தபடி விக்கி தூங்குகிறார். இன்னொரு புகைப்படத்தில்  நயன்தாராவை கட்டி அணைத்தபடி எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தையும் விக்கி பதிவிட்டுள்ளார். இதற்கு, நான் பிறந்த தினமே என்ற அதே பாடலில் வரும் கேப்ஷனை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களுடன் நயன் & விக்கி தங்கள் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara hugs vignesh shivan latest romantic pic

People looking for online information on Nayan wikki, Nayantha hugs vignesh shivan, Nayanthara, Nayanthara Marriage, Nayanthara Vignesh Shivan marriage will find this news story useful.