நயன்தாரா நடிக்கும் 'CONNECT'.. ஸ்பெஷல் ஷோ பார்க்க திரண்ட பிரபலங்கள்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா.

Advertising
>
Advertising

Also Read | "இந்த பாட்டு கேட்டு பலமுறை அழுதுட்டேன்".. 'வாரிசு' அம்மா Song.. தமன் உருக்கம்!

நயன்தாரா, ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல்  படங்களில் காணப்பட்டார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் அஸ்வின் சரவணன், நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியானது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22.12.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. ஹாரர் வகைமையில் இந்த டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கலந்து கொண்டனர்.

இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் சில ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுடன் நயன்தாரா புகைப்படங்கள் எடுத்து ஆட்டோகிராப் கையெழுத்திடும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

Also Read | "நான் கொண்ட காயங்கள் போகுதம்மா".. நெஞ்சை உருக்கும் வாரிசு படத்தின் அம்மா பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Connect Movie Premier Show Glimpse Video

People looking for online information on Connect, Connect Movie Premier Show Glimpse, Nayanthara, Vignesh shivan will find this news story useful.