நயன்தாரா நடிக்கும் CONNECT.. இடைவேளையே இல்லாத தமிழ் படம்! சென்சார் விவரம் & ரன்னிங் டைம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிக்கும் Connect படத்தின் சென்சார் விவரம் & ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரு பாட்டுக்கு மட்டும் 15 கோடி செலவில் ஷூட்டிங்.. ஷங்கரின் RC15 படத்தின் வைரல் போட்டோஸ்!

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.  படம் உருவாகி வருகிறது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியானது. இந்த திரைப்படம் 22.12.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாத தமிழ்த் திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | முகம் வீங்கிய போட்டோவை வெளியிட காரணம் இது தான்! நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Connect Movie Censored UA Running Time Details

People looking for online information on Connect Movie, Nayanthara, Nayanthara Connect Movie will find this news story useful.