நயன்தாராவின் பிறந்தநாள்.. UNSEEN போட்டோக்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறிய வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Venkat Prabhu : மறைந்த தமது அன்னையின் பிறந்த தினம்.. இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கம்..!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிலையில்  விக்னேஷ் சிவன்,  நயன்தாராவின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " உங்களுடன் இது எனது 9வது பிறந்தநாள் நயன். 😍 

ஒவ்வொரு பிறந்தநாளிலும் நீங்கள் சிறப்பாகவும், மறக்க முடியாததாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கிறீர்கள்!

ஆனால், கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஒரு வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதாலும், அழகான ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக!எல்லாவற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த பிறந்தநாள் இது!

நான் எப்போதும் உங்களை  அறிவேன், உங்களை ஒரு சக்திவாய்ந்த மனிதனாகப் பார்க்கிறேன்!
நீங்கள் எதைச் செய்தாலும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள் அது தான் உங்கள் பலம்! இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபராக உங்களை பார்த்தேன்! உங்கள் நேர்மை மற்றும் பொறுப்புடைமையால் எப்போதும் ஈர்க்கப்பட்டேன்!

இன்று !
நான் உங்களை ஒரு தாயாக பார்க்கும் போது!
இதுவே உங்களின் மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம் என கருதுகிறேன்.

நீங்கள் இப்போது முழுமையாகிவிட்டீர்கள்! நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது! நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்!

குழந்தைகள் உங்கள் முகத்தை முத்தமிடுவதால் இந்த நாட்களில் நீங்கள் மேக்கப் கூட போடுவதில்லை! இத்தனை வருடங்களில் உங்களை விட அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை!

உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகையும் மகிழ்ச்சியும், எப்போதும் இருக்க நான் பிராத்திக்கிறேன் !

வாழ்க்கை அழகாக இருக்கிறது... திருப்தியாகவும் நன்றியுடனும் இருக்கிறது!

உங்களின் எல்லா பிறந்தநாளிலும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்! நமது குழந்தைகளுடன் .. நாம் ஒன்றாக சேர்ந்து வளருவோம்!

என் அன்பான பொண்டாட்டி, தங்கமே, என்றும் என் உயிர் & உலகம்   😍😘😘😘😘😘😘😘😘 உன்னை நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா! மை லேடி & சூப்பர் ஸ்டார்   😍😇" என விக்னேஷ் சிவன் நயன்தாராவை வாழத்தியுள்ளார்.

Also Read | Rambha : குழந்தையாகவே மாறிய நடிகை ரம்பா.. செம Vibe-ல இருக்காங்க.. க்யூட் வீடியோ 😍

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Birthday Wishes from Vignesh Shivan

People looking for online information on Nayan wikki, Nayanthara, Nayanthara birthday, Nayanthara Birthday Wishes, Vignesh shivan, Wikki Nayan will find this news story useful.