BREAKING - விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணையும் படத்தின் முக்கிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுடன் இணையும் SK17 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். மேலும், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணையும் நெட்ஃபிலிக்ஸ் Anthology புராஜெக்ட்டிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் சிவன், சமீபத்தில் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளரானார். இயக்குநர் மிலிந்த் ராவின் இரண்டாவது படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாராவும், ‘Sacred Games' புகழ் நடிகர் லூக் கென்னி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கி முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் மீண்டும் சென்னையிலேயே இன்று (அக்.17) தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதி விஜய்யின் ‘பிகில்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கும், ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara and Vignesh Shivan's Netrikan second schedule starts

People looking for online information on Nayanthara, Netrikan, Rowdy Pictures, Vignesh shivan will find this news story useful.