திருப்பதி கோயிலில் ‘மூக்குத்தி அம்மன்’!!.. கைகோர்த்து நடந்துவந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஐயா’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமானார்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

இதனிடையே மாயா, டோரா, கொலையுதிர்க் காலம், மூக்குத்தி அம்மன் என பெண் மையக் கதாபாத்திர கதைகளில் நடித்துவந்த நயன்தாரா அண்மையில் நேரம், பிரேமம் இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்டு எனும் புதிய திரைப்படத்தில் இணைந்தார்.

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அஜ்மல் அமீரும் நடிக்கிறார். தமிழில் கடைசியாக நயன்தாரா நடித்து ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வில்லனாக அஜ்மல் அமீர் மிரட்டியிருந்தார்.

தொடர்ந்து நடிகை நயன்தாரா, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்தே, காட்ஃபாதர் மற்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்படி, இவர்கள் இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். கோயில் வளாகத்திற்கு வெளியே இருவரும் கைகோர்த்தும், மாஸ்க் அணிந்தும் நடந்துவரும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ‘டூ..டூ..டூ’ பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோயிலில் ‘மூக்குத்தி அம்மன்’!!.. கைகோர்த்து நடந்துவந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara and vignesh shivan visits tirupati together video

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Nayanthara, Tirumala, Tirumalatirupati, Tirupati, Trending, Vignesh shivan, Wikki will find this news story useful.