நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயின் இவங்களா? CSK & MI FANSக்கு குஷி தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணையர்  Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தை நடத்தி வருகின்றனர்.

Advertising
>
Advertising

இந்த பேனர் சார்பில் தற்போது “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற படங்களின் உரிமையை பெற்றுள்ளது. கூழாங்கல் திரைப்படம் தற்போது இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் “நெற்றிக்கண் படத்தை வெளியிட்டது, விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "காத்து வாக்குல ரெண்டு காதல்” படமும் ஓடிடி வெளியீடு என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படங்களை அடுத்து புதிய தயாரிப்பாக  “Walking/Talking Strawberry Ice Cream “ படத்தினை  தயாரிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படம் முழுக்க, முழுக்க காதலும் காமெடியும் கலந்த Romedy திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் சகோதரியும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ராகுல் சாஹரின் சகோதரியான மல்டி சாஹர் நடிக்கிறார். இதை மல்டி சாஹர், விக்னேஷ் சிவன் இணைந்து டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

NAYANTHARA AND VIGNESH SHIVAN LOCKS THIS YOUNG HEROINE

People looking for online information on Deepak Chahar, Malti Chahar, Nayanthara, Rahul Chahar, Vignesh shivan will find this news story useful.