தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.
Tags : Nayanthara, Alphonse Puthren, Prithvi Raj