விஜய் நடிக்கும் 'தளபதி 67'.. படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற டெக்னீஷியன்கள்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

தளபதி 67 படத்திற்காக சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான விக்ரம், KGF-2, கட்டா குஸ்தி படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைத்தது இவர்கள் தான். KGF முதல் பாகத்திற்காக அன்பறிவ் இரட்டையர்கள் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

National Award Winning Stunt Masters on Board for Thalapathy67

People looking for online information on Anbariv, Lokesh, Thalapathy67, Vijay will find this news story useful.