இந்தியாவை சேர்ந்த பெண் தொழிலதிபரான நடாஷா பூனாவாலா புகழ்பெற்ற மெட் கலா நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த ஆடை பலரையும் ஈர்த்துள்ளது.
Also Read | அடேங்கப்பா இதுதான் உலகத்துலயே ரொம்ப காஸ்ட்லியான Dress-ஆ..? இவ்வளவு கோடிக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
மெட் கலா 2022
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஆடை அலங்கார கண்காட்சியான மெட் கலா ஃபேஷன் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சினிமா நட்சத்திரங்கள், மாடல் துறையை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வது வழக்கம். நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பெண் தொழிலதிபரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா-வின் எக்சிகியூடிவ் இயக்குனருமான நடாஷா பூனாவாலா இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வினோத ஆடை
இந்த புகழ்பெற்ற மெட் கலா நிகழ்ச்சியில் பாதி புடவையும், பாதி உலோகத்தால் செய்யப்பட்டது போன்ற ஆடையையும் அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் நடாஷா. இதுகுறித்து அவர் குறிப்பிட்டபோது," இந்த உலகில் பல்வேறு விதமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது கலை தான். இசை, படங்கள் போன்ற கலைகள் மூலமாகவே நம்முடைய இதயத்தில் உள்ள பல விஷயங்களை வெளிப்படுத்த முடியும். உலகமே பெருநோய் காலத்திலிருந்து வெளியே வந்திருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற உடை எனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்" என்கிறார்.
முதலில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடை வடிவிலான உடையையே அணிய இருந்ததாகவும் அதன் காரணமாகவே மேல்புறத்தில் உலோகத்தால் ஆன பகுதியையும் சபயாசாஷி புடவையை இடுப்பிலும் அணிந்ததாக பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.
சபயாசாஷி
இந்த உடை மன உறுதியையும் மென்மை தன்மையையும் ஒருங்கே கொண்டதாக குறிப்பிடும் நடாஷா, காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அலங்கார ஆபரணங்கள் மூலமாகவும் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார். தங்கத்தினால் எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவை, வித்தியாசமான அணிகலன்கள் என தனித்துவம் மிகுந்த இந்த உடையை கொல்கத்தாவை சேர்ந்த புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சபயாசாஷி உருவாக்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற மெட் கலா விழாவில் இந்தியாவைச் சேர்ந்த நடாஷா பூனாவாலா அணிந்துவந்த ஆடை குறித்து தற்போது பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8