A.R. ரஹ்மானுடன் நடிகர் நெப்போலியன் சந்திப்பு.. இதான் காரணமா? அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

Advertising
>
Advertising

Also Read | மும்பையில் குடும்பத்துடன் சூர்யா & ஜோதிகா.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ் & வீடியோஸ்

தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்களுடன் இணைந்து முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவற்றுக்காக ஆஸ்கார், கிராமி விருதுகள் வரை பல விருதுகளையும் பெற்றவர்.

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

தற்போது  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மான் பணியாற்றுகிறார்.

இதில் இயக்குனர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படமும் குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக அமெரிக்காவில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள தனது பஞ்சதன் ஸ்டூடியோவில் இருந்து கோப்ரா & பொன்னியின் செல்வன் பாடங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன்- ரஹ்மான் சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!
அதே அன்பான உபசரிப்பு…!
இன்று இரவு (August 10th) இங்கு நடைபெரும் இசை நிகழ்ச்சியில் எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தபோகிறார்..!
அவரது இசைப் பயணம் தொடர் வெற்றிபெற எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…!" என‌ குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "இத சாப்ட்டு Workout பண்றவங்க ஒன்னா இருப்பாங்க" - ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Napoleon Meet A R Rahman at United States of America Nashville

People looking for online information on AR Rahman, Napoleon, Napoleon Meet A R Rahman, United States of America Nashville will find this news story useful.