மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்.. ரசிகர்களை கவரும் வேறலெவல் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் டீசர் சிலமாதங்களுக்கு முன் ரிலீசானது. முதல் டீசரில் படத்தில் நடித்துள்ள பிரதான கதாபாத்திரங்கள் இல்லாமலே டீசர் அமைந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள டீசரில் மம்முட்டி ஒரே ஷாட்டில் நடித்துள்ள ஒன்றரை நிமிட காட்சி டீசராக வெளியாகி உள்ளது.

இந்த டீசரில் மம்மூட்டி, 1973 ஆம் ஆண்டு தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கௌரவம்' படத்தின் (பாரிஸ்டர் ரஜினிகாந்த் & அட்வகேட் கண்ணன் வாக்குவாதம் செய்யும்) காட்சியை சிங்கிள் ஷாட்டில் பேசி நடித்துள்ளார். கௌரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் & அட்வகேட் கண்ணன் 70 காலகட்டங்களில் சிவாஜி கணேசனின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆகும். 

மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்.. ரசிகர்களை கவரும் வேறலெவல் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nanpakal Nerathu Mayakkam Official Teaser 2 Mammootty

People looking for online information on Lijo Jose Pellissery, Mammootty, Nanpakal Nerathu Mayakkam, Official Teaser 2, Ramya Pandian will find this news story useful.