“நான் தப்பே பண்ல.. வண்டியில ஏத்தும்போது கத்துனேன், அழுதேன்...” - நாஞ்சில் விஜயன் BREAKING INTERVIEW

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது, இது, எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர் விஜயன். பெண் வேடங்களில் இவர் தோன்றி நடித்த பல நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், நாஞ்சில் விஜயன் பிரபல சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Rachitha : அம்மாவ பார்த்ததும் உணர்ச்சி பொங்க அழுத ரச்சிதா.. கலங்கவைத்த Bigg Boss ப்ரோமோ..

இந்நிலையில், நாஞ்சில் விஜயனை சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள நாஞ்சில் விஜயன், இது தொடர்பாக பிஹைண்ட்வுட்ஸில் பேசும்போது, “நான் கைதானதை நானே நம்பல. உள்ளே சென்ற பிறகுதான் நம்பினேன். 2020-ல் அந்த பொண்ணு 4 பசங்களோடு வந்து என்னை தாக்கினார்கள். இதற்காக நான் புகார் அளித்திருந்தார்.

இதனால் என் மீது FIR போட்டிருந்தார்கள். ஆனால் அவர்களும் என் மீது புகார் அளித்திருந்ததுடன், முன் ஜாமின் பெற்றிருந்தார். இதனால் என்னை தேடி காவலர்கள் வந்தனர். அப்போது நான் ஷூட்டிங்கில் இருந்தேன். பின்னர் வீட்டுக்கு போகும் வழியில் காவல் நிலையத்துக்கு போனேன், அப்போது ஏன் முன் ஜாமின் எடுக்கவில்லை என என்னை கேட்கிறார்கள். நானோ மாலை போட்டிருந்தேன். ஆனால் யாருடைய அழுத்தம் காரணமாகவோ, கோவிட் செக்கப் என அழைத்து போனவர்களை நம்பி நானும் போனேன். நான் பேசிக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் என்னை ஸ்டேஷனுக்கே கூட்டிப்போகல. என் செல்ஃபோனை வாங்கிக் கொண்டார்கள். இதனிடையே செய்திகள் வெளியாகின. ஒரு வழியாக இரவு 9 மணிக்கு மாஜிஸ்திரேட்டை பார்த்தபோது தான் 7 நாள் ரிமாண்ட் என சொன்னார்கள். நான் தப்பே பண்ணல என கத்துகிறேன், அழுகிறேன். ஆனால் என்னை பிடித்து வண்டியில் ஏற்றிச் சென்று புழல் சிறையில் அடைத்தார்கள்.” என பேசியுள்ளார்.

Also Read | “துணை என்பது கானல் நீர்.. தனியாகத்தான் வந்தோம்.. தனியாக போவோம்” - செல்வராகவன் வைரல் பதிவு.!

“நான் தப்பே பண்ல.. வண்டியில ஏத்தும்போது கத்துனேன், அழுதேன்...” - நாஞ்சில் விஜயன் BREAKING INTERVIEW வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nanjil Vijayan Explanation for his arrest Breaking Interview

People looking for online information on Nanjil Vijayan, Nanjil Vijayan Explanation for his arrest will find this news story useful.