நானி நடிக்கும் 'டக் ஜெகதீஷ்' படத்தின் ஆக்சன் செண்டிமெண்ட்டோடு மிரட்டலான டிரெய்லர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமேசான் பிரைம் வீடியோ நானியின் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு குடும்பச்சித்திரம் Tuck Jagadish-ன் உலகளாவிய பிரீமியரை அறிவித்துள்ளது அமேசான் ஒரிஜினல் மூவி செப்டம்பர் 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது

மும்பை, இந்தியா, 1 செப்டம்பர் 2021: டோலிவுட்டில் ‘நேச்சுரல் ஸ்டார்’ - நானி அவர்களது நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு குடும்பச்சித்திரம் Tuck Jagadishன் உலகளாவிய வெளியீட்டை அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. சிவா நிர்வணா இயக்கியுள்ள இந்த அமேசான் ஒரிஜினல் மூவி ஷைன் ஸ்கிரீன்ஸின் பதாகையின் கீழ் சாகு கரபதி மற்றும் ஹரிஷ் பெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கலைஞர்களைக் கொண்டுள்ள Tuck Jagadishல், ரிது வர்மா, ஜெகபதி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர், வைஷ்ணவி சைதன்யா, தேவதர்ஷினி மற்றும் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். செப்டம்பர் 10 ஆம் தேதி உலகளவில் பிரீமியர் செய்யப்படவுள்ள, Tuck Jagadish அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.

ஆந்திராவின் டின்ஸல் நகரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்லும் போது அதன் மூலம் நெருங்கிய கூட்டுக் குடும்பத்தில் உடன்பிறப்புகளுக்கிடையேயான சிறப்பு பிணைப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த ஜெகதீஷ் நாயுடுவின் (நானியின் கதாபாத்திரம்) வாழ்க்கை மற்றும் பயணத்தை விவரிக்கிறது இந்த திரைப்படம் வியத்தகு உணர்ச்சிகரமான தருணங்கள், அதிரடி காட்சிகள் மற்றும் இசை ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது, ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு அம்சமாக அமைந்துள்ளது - இது டோலிவுட்டில் இதுவரை வெளிவந்த படங்களிலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பாகும்.
"V இன் வெற்றிகரமான உலக ப்ரீமியரைத் தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்கிறார் 'நேச்சுரல் ஸ்டார்' நானி.

“பிள்ளையார் சதுர்த்தி என்னும் ஒரு மங்களகரமான நாளில், மனதிற்கு இனிமையான இத்திரைப்படத்தை எங்கள் நேயர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், தங்களது வீடுகளில் இருந்தபடி சொகுசாகவும் அனுபவிக்கும் வகையில் நாங்கள் வழங்குகிறோம். மேலும், இத்திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பானதாகும் மற்றும் எனது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுடன் இதைப் பகிர்ந்துகொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன். Tuck Jagadish  படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது மற்றும் திரைக்கு முன்னும் பின்னும் குழுவினருடன் நீடித்த எங்களது நட்பு திரையிலும் சிறப்பாக் பிரதிபலித்துள்ளது. இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

"குடும்ப நாடகங்கள் ஒரு உள்ளார்ந்த நல்லுணர்வைக் கொண்டவையாகும், Tuck Jagadish அத்தகைய ஒரு இணையற்ற மகிழ்ச்சியை நேயர்களுக்கு வழங்கும். மகிழ்ச்சியான பயணத்தை உறுதியளிப்பார், அது நிச்சயமாக பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்" என்று இயக்குனர் சிவ நிர்வணா கூறினார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நானியைவிட பொருத்தமான நடிகர் யாருமில்லை. அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் Tuck Jagadish உலகளாவிய பிரீமியரை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன். ஒரு சிறந்த நடிகரான நானி பல சிறந்த நடிகர்களுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதையடுத்து, உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களின் நேர்மறையான வரவேற்ப்பை இது பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

அமேசான் பிரைம் வீடியோவில், உள்ளூர் கதைகளே உலகளாவிய வெற்றிப்படங்களாக மாறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இதற்கு Tuck Jagadish ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த குடும்ப நாடகம், இதயப்பூர்வமான உணர்ச்சிகள், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆகியவற்றின் அழகான கலவையை வழங்குகிறது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்ப்பினைப் பெறும்" என்று அமேசான் பிரைம் வீடியோ, உள்ளடக்கங்கள் பிரிவின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள் கூறினார். "பிரைம் வீடியோவில், உள்ளூர் மொழி உள்ளடக்கத்தின் ஆழமான தொகுப்புகளை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் Tuck Jagdish குறிப்பாக எங்கள் தெலுங்கு திரைப்பட பார்வையாளர்களுக்கான மிகப்பொருத்தமான ஒரு கதையாகும். சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினரைக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ள இந்த மனதிற்குப் பிடித்தமான திரைப்படத்தை உயிர்ப்பித்த ஷைன் ஸ்கிரீன்ஸை எங்களது நம்பகமான கூட்டாளியாகக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நானி நடிக்கும் 'டக் ஜெகதீஷ்' படத்தின் ஆக்சன் செண்டிமெண்ட்டோடு மிரட்டலான டிரெய்லர்!!! வீடியோ

Tags : Nani, RituVarma

Nani Tuck Jagdish telugu movie trailer update

People looking for online information on Nani, RituVarma will find this news story useful.