நானி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஆக்சன் திரைப்படம் 'தசரா'.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  “தசரா”  படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தமிழ் & மலையாளத்தில் வெளியாகும் 'GOLD'.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது  ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.

நேச்சுரல் ஸ்டார்  நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக  முழுக்க முழுக்க, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக  அவர்  நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக  மாற்றிக்கொண்டுள்ளார்.  இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே  அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது. இந்த படம், ஸ்ரீராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வார விடுமுறையை ஒட்டி “தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக  அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில்  நானி நடிக்கிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Also Read | விஷால் - சுனைனா நடிக்கும் 'லத்தி'.. பட ரிலீஸ் உரிமம் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Starring Dasara Movie Shooting Update

People looking for online information on Dasara Movie, Dasara Movie Shooting Update, Keerthy Suresh, Nani will find this news story useful.