DASARA: "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்".. நானியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | லோகேஷ் கனகராஜ் BIRTHDAY பார்ட்டியில் த்ரிஷா.. யாரோட இருக்காங்க பாருங்க.. வைரல் போட்டோ!

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. லக்னோ நகரில் உள்ள பிரதீபா தியேட்டரில் படக்குழுவினர் இந்த டிரெய்லரை வெளியிட்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

ரொமான்ஸ், ஆக்சன், செண்டிமெண்ட் காட்சிகள் டிரெய்லரில் பிரதான அம்சமாக உள்ளன. நிலக்கரி சுரங்கம் பிண்ணனியில் இந்த படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ராமர் - ராவண படிம காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ டிரெய்லரில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சமுத்திரக்கனி, நானியின் தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இதுவரை காணாத லுக்கில் தோன்றியுள்ளார்.

Also Read | பிரசித்தி பெற்ற இத்தாலி நகரில் கமல்ஹாசன்.. இந்தியன் 2 லுக்கில் வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Dasara Movie Trailer Released

People looking for online information on Dasara, Dasara Movie Trailer, Keerthy Suresh, Nani will find this news story useful.