நானி& கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தசரா'.. சந்தோஷ் நாராயணன் இசையில் 1ST SINGLE எப்போ? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் தசரா படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கொட்டும் மழையில்.. நண்பரின் பைக்கை மெக்கானிக்காக ரிப்பேர் பார்த்த அஜித்! சூப்பர் வீடியோ

நேச்சுரல் ஸ்டார் நானி முதன்முறையாக ஒரு முரட்டுத்தனமான கிராமத்து கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார், இது நானியின் முதல் பான் இந்தியா படமாகும்.  கிராமிய மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியாக உள்ளது.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கின்றார்.  இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நானியின் காதலியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் தூம்தாம் தோஸ்தான் தசரா அன்று வெளியாகவுள்ளது. இது தொடர்பான வீடியோவில் நானி பாடல் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். நானி இதை ‘மிக பிரம்மாண்டமான லோக்கல் ஸ்ட்ரீட் சாங்’ என்று வீடியோவில் குறிப்பிடுகிறார்.

படத்தின் கதை பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

Also Read | "யாரோ குழந்தைக்கு அப்பாவா நான் இருக்கனுமா?" ஆத்திரமடைந்த பாரதி.. வெண்பா போட்ட புதிய PLAN!

நானி& கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தசரா'.. சந்தோஷ் நாராயணன் இசையில் 1ST SINGLE எப்போ? செம அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Dasara First Single Update

People looking for online information on Dasara, Dasara First Single Update, Keerthy Suresh, Nani will find this news story useful.