"FUN நானி, CUTE நஸ்ரியா.." அடடே சுந்தரா படத்தின் டிரைலர் எப்போ?.. GLIMPSE வீடியோவுடன் வெளியான 'UPDATE'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம், 'அன்டே சுந்தரனக்கி'. தெலுங்கில் உருவாகி உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வேற லெவல் Update … பகத் ஃபாசில் கதபாத்திரம்... சீக்ரெட் உடைத்த ‘விக்ரம்’ படக்குழு – வைரல் Poster

பிரபல இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கி உள்ள இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

நேரம், ராஜா ராணி, பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை நஸ்ரியா, முதல் முறையாக அன்டே சுந்தரனக்கி திரைப்படம் மூலம், தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

கவனத்தை ஈர்த்த டீசர்

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சுந்தராக வரும் நானி மற்றும் லீலாவாக வரும் நஸ்ரியா ஆகியோருக்கு மத்தியில் உள்ள கெமிஸ்ட்ரி, நகைச்சுவை காட்சிகள் என அனைத்தும் அதிக கவனத்தை ஈரத்ததால், படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸையும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

டிரைலர் ரிலீஸ் எப்போது?

தமிழில் 'அடடா சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும், ஜூன் மாதம் 10 ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு, இன்று (30.05.2022) வெளியாகும் என படக்குழு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி, டிரைலர் கிளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ள அன்டே சுந்தரனக்கி படக்குழு, வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி, படத்தின் டிரைலர் வெளியாகும் என நானி - நஸ்ரியா இருக்கும் புகைப்படம் ஒன்றுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, லீலா கதாபாத்திரத்தில் வரும் நஸ்ரியாவின் Bloopers வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில், நஸ்ரியாவின் ஏராளமான ரியாக்ஷன்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அந்த 60 நிமிஷம் இருக்கே.." சூப்பர்ஸ்டாருடன் SK எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. அவர் போட்ட Caption தான் 'செம'

தொடர்புடைய இணைப்புகள்

Nani and nazriya adade sundara trailer release update

People looking for online information on Adade sundara trailer, Adade sundara trailer release update, Nani, Nazriya will find this news story useful.