செம! புது வீடு கட்டி பால் காய்ச்சிய நடிகை நந்திதா ஸ்வேதா..! எந்த ஊர்ல? வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நந்திதா ஸ்வேதா புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "ராஜராஜ சோழன்.. திருவள்ளுவர்... என தொடர்ந்து நம் அடையாளங்கள்..." - வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

இதையடுத்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, IPC 376 ஆகிய படங்களில்  நடித்து இருந்தார். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா, தனது சொந்த ஊரான பெங்களூர் நகரில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார். இந்த புதுமனை புகுவிழாவில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார்.

சினிமா பின்னணி பாடகர் & கன்னட பிக்பாஸ் பிரபலம் ஶ்ரீ ராமச்சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஃபேஷன் டிசைனர் ரேஷ்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | பிரபல தியேட்டரில் PS1 நடிகர்களுடன் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்.. கூட இவங்க வேற இருக்காங்களா?

 

தொடர்புடைய இணைப்புகள்

Nanditha Swetha New House Warming Ceremony at Bangalore

People looking for online information on Bangalore, House warming ceremony, Nanditha, Nanditha Swetha will find this news story useful.