அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Also Read | வேற லெவல் லுக்கில் ஶ்ரீ ராமனாக பிரபாஸ்.. 'ஆதி புருஷ்' படத்தின் முதல் லுக் போஸ்டர்!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நந்தினி, குந்தவை மற்றும் பூங்குழலி கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது,. பொதுவாக ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட நடிகைக்காக ஆர்மி என்பதை உருவாக்குவது உண்டு, இம்முறை பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்காகவும், அந்த கதாபாத்திரங்களை பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்று நடிக்கும் நடிகைகளுக்காகவும் ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி இருக்கின்றனர். அதன்படி ஐஸ்வர்யா ராய் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரக்கும், த்ரிஷா நடிக்கும் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்துக்கும் ஆர்மி உருவாகியது. இதேபோல் இந்த கேரக்டர்களுக்கு நிகராக, பூங்குழலி கதாபாத்திரத்துக்கும் ஆர்மி உருவாகி இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை பொறுத்தவரை, தியாகவிடங்கரின் மகளாகவும், படகோட்டி முருகய்யனின் தங்கையாகவும், படகோட்டியாகவும் பூங்குழலி வலம் வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் FDFS.. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் படம் பார்த்த ஜெயம் ரவி!