இருந்தாப்ல இருந்து பெரிய சண்டை ஆயிடுச்சே.. நமீதா - தாமரை செல்வி இடையில் வெடித்த பிரச்சனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் முதல் சண்டையாக நமீதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி சண்டை அரங்கேறியது.

Namitha Thamarai Selvi first conflict biggbosstamil5

ஒரு டிரைலர் அளவு தான் இந்த சண்டை என்று இருந்தாலும் கூட, இதற்கு ஒரு தொடக்கம், எதிர்பாராத திருப்பம், முடிவு என்று அத்தனையும் அமைந்திருக்கிறது என்பது தான் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

நமிதா மாரிமுத்து முன்னதாக கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தம்முடைய கதையை கூறியிருந்தார். அதன்படி தன்னுடைய பெற்றோர் தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்து விட முயற்சி செய்தது, அங்கிருந்து தப்பி பாம்பே சென்னை என தன் விடுதலைக்காக போராடியது, கடைசியில் கோர்ட் கொடுத்த தீர்ப்பு, அதன்பின்னர் தனியே வாழ்ந்து காட்டு வேண்டும் என்கிற தனது முடிவு, தொடர்ந்து பெற்றோர் தன்னை ஏற்றுக் கொண்டது என அனைத்தையும் நமீதா சொல்லிக்கொண்டிருந்தார்.

Namitha Thamarai Selvi first conflict biggbosstamil5

அதேபோல் திருநங்கைகளை பற்றி பாசிட்டிவாக பேசிய நமிதா மாரிமுத்து, சமூகமும் பெற்றோரும் மாற வேண்டும், அனைவருக்கும் பொறுப்பு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அப்போது, தான் மேலும் நிறைய சமூக சேவைகளை திருநங்கைகளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் செய்து வருவதாகவும், உலகம் முழுவதும் அதற்கான அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியங்காவும் தாமரைச்செல்வியும் யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமிதா மாரிமுத்து நிறைய குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பது பற்றி பேசிய தாமரை செல்வி, 40 குழந்தைகள் என்ன 400 குழந்தைகளை கூட வளர்த்து படிக்க வைக்கலாம் நீங்க என்று நமீதாவை பார்த்து குறிப்பிட்டுள்ளார். மேலும், மீண்டும் மீண்டும் சிரித்தபடி இந்த விஷயத்தை தாமரைச்செல்வி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இது குறித்து சமாதானம் பண்ண முயன்ற பிரியங்கா, சிரிக்காதே என்று தாமரைச்செல்வியை கட்டுப்படுத்தி பார்க்கிறார். ஆனாலும் தாமரைச்செல்வி தான் செய்த தவறு என்ன என்று உணராத படியாக மீண்டும் மீண்டும், “நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். நமீதா மாரிமுத்து ஒரு கட்டத்தில் டென்ஷனாகி நம் இருவருக்குமான சண்டை தான் அடுத்த வாரம் ப்ரோமோவில் வரும் என்று குறிப்பிட்டுவிட்டுச் சென்று போயிருந்தார்.

அதன்பிறகு இதுபற்றி தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சியிடம் தெரிவிக்க, இமான் அண்ணாச்சி, “உன்னுடைய பேச்சு வழக்கு பார்ப்பவருக்கு தவறாக தெரியலாம். அவர் மீதும் தவறில்லை. உன் மீதும் தவறில்லை” என்று சொல்லி நமீதாவை அழைத்து சமாதான படுத்தலாம் என்று முயன்றார். அதன்படி நமீதாவை தாமரைச்செல்வி அருகே வரச் சொல்லி அழைத்தார். 

ஆனால் அங்கு வந்த நமீதா, “வேண்டாம்.. கோச்சுக்காதீங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு நகர்ந்து விட்டார். இமான் அண்ணாச்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதன்பின்னர் அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, வெளியில் படுத்திருந்த தாமரைச் செல்வியை வந்து எழுப்பிய நமீதா, “நான் ஏதாவது உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடு! என்று கூறினார்.

முன்னதாக தாமரைச்செல்வி, தேடிச்சென்று நமீதாவிடம் மன்னிப்பு கேட்டும் நமீதா மனம் இறங்கவில்லை. தாமரையின் மன்னிப்பை ஏற்கவும் இல்லை. இந்த நிலையில் தானாகவே வந்து தாமரைச்செல்வியிடம், நமீதா சமாதானம் பேசியிருக்கிறார். அதன் பின்னர் தாமரைச்செல்வியினை அழைத்து சென்று போய் டீ போட்டுக் கொடுத்திருக்கிறார் நமீதாம். மேலும், “நான் அப்படித்தான் கோபத்தை காட்டினால் அன்பை கொடுப்பேன்!” என்றும் நமீதா கூறி சமாதானம் ஆகினார்.

இப்படி இவர்களின் சண்டை துளிர்விட்டு, இது எங்க போய் முடிகிறது என்கிற அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தி, இறுதியில் முத்தாய்ப்பாய் ஒரு சமாதானத்தில் வந்து நின்று இருப்பதில் இப்போதைக்கு ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Namitha Thamarai Selvi first conflict biggbosstamil5

People looking for online information on Namitha Marimuthu, Priyanka, Thamarai Selvi will find this news story useful.