SPIDER MAN சவால்.... பிரபல தமிழ் ஹீரோ வெளியிட்ட வீடியோ - குவாரண்டைன் பரிதாபங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2003ல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சினிமா எண்ட்ரி கொடுத்தவர் நகுல். அப்புறம், ஒரு சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக வந்தபோது யாருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை.

அத்தனை கடின உழைப்போடு தன் உடலை கட்டுமஸ்தாக மாற்றி வந்திருந்தார் நகுல். அவர் நடித்த காதலில் விழுந்தேன் ’நாக்கு முக்க’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி செம ஹிட் அடித்திருந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது குவாரண்டைன் என்பதால் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமா நட்சத்திரங்களின் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறதல்லவா. ஸ்பைடர் மேன்- ஹோம் கம்மிங்கில் நடித்த டாம் ஹாலண்டும் தன் பங்குக்கு ஒரு வீடியோவை வைரலாக்கி விட்டார். 

சுவரில் கால் வைத்து தலைகீழாக நின்று டீஷர்ட் போட வேண்டும் - இதற்பு பெயர் டாம் ஹாலண்ட் சேலஞ்ச். இந்த சவால் இப்போது இந்தியாவை தொற்றி பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நகுல் இந்த சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்த வீடியோவை இன்ஸ்டக்ராமில் வெளியிட்டுள்ளார்.

Nakul achieves Spider Man Tom Holland Challenge in Instagram Video | நகுல் ஸ்பைடர் மேன் டாம் ஹாலண்டின் சேலஞ்சை ஏற்ற வீடியோ வைரல்

People looking for online information on Nakul, Tom Holland will find this news story useful.