அக்கா நக்மாவுடன் தங்கை ஜோதிகா.. திருமண விழாவில் குழந்தைகளுடன் வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா, குழந்தைகள் & அக்கா நக்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "'LEO'-னு டைட்டில் வைக்க இதான் காரணம்".. வசனகர்த்தா கொடுத்த செம்ம தகவல்..!

நடிகை ஜோதிகா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர்.

1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா மூலம் இந்தியில் பிரபலமான ஜோதிகா, பின்னர் தமிழில் வாலி படத்தின் மூலம் பிரபலமானார். ஜோதிகா சமீபத்தில் தனது ஹிந்தி படமான ஸ்ரீ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மலையாளத்தில் காதல்: தி கோர் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை தி கிரேட் இந்தியன் கிச்சன் புகழ் ஜியோ பேபி இயக்குகிறார்.

அதேபோல் நடிகை நக்மா, காதலன், பாட்ஷா, லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, சிட்டிசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட  மொழிகளிலும் பல படங்களில் நக்மா நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2003-04 ஆண்டு முதல், முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் நக்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நக்மா தமது சகோதரி ஜோதிகாவுடன் குடும்ப திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

ஜோதிகாவின் குழந்தைகள், ஜோதிகா, மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் நக்மா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Also Read | 'துணிவு' படம் பார்த்த பிரபல முன்னாள் CSK வீரர்.. ஒரு வரியில் நச் Review!

தொடர்புடைய இணைப்புகள்

Nagma shared family wedding event photos on Instagram

People looking for online information on Jyothika, Nagma, Nagma family wedding event photos will find this news story useful.