CUSTODY : வெங்கட் பிரபு - சைதன்யா கூட்டணியில் உருவாகும் கஸ்டடி.. வெளியான அடுத்த அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்  தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Pandian Stores : பொங்கி எழுந்த ஜீவா.. அண்ணன் மூர்த்தியிடம் அடுக்கிய கேள்விகள்! உடைகிறதா குடும்பம்?

பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிக கண்டெண்ட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் டீசர் மார்ச் 16 ஆம் தேதி மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும். இதை அறிவித்ததோடு படக்குழு ஒரு சுவாரஸ்யமான க்ளிம்ப்ஸையும் வெளியிட்டுள்ளனர். இது டீசருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஸ்டைலான பின்னணி இசை, பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் படத்தின் பலத்தை மேலும் கூட்டும்படி அமைந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ப்ரியாமணி பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கினேனியின்  கரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் 'கஸ்டடி'யும் ஒன்று.

பிரமாண்டமான கேன்வாஸில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

'கஸ்டடி' திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர்கள்:

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்
சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ
கலை இயக்குநர்: டிஒய் சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா டி'ஒன்,
மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா

Also Read | Iniya : ‘தாலி கட்டுறப்போ போடும் 3 முடிச்சுக்கு அர்த்தம்’.. புதுப்பொண்ணு ‘இனியா’ சொன்ன விளக்கம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Naga Chaitanya Venkat Prabhu Custody Teaser Update

People looking for online information on Custody, Naga chaitanya, Venkat Prabhu will find this news story useful.