நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி'.. ரிலீஸ் எப்போ? OFFICIAL!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இது தான் தளபதி".. சாண்டி மாஸ்டருக்கு நடிகர் விஜய் கொடுத்த கிஃப்ட்.. நெகிழ்ச்சி பதிவு!

தெலுங்கு-தமிழ் இருமொழிகளில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்  வெளியானது.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.    இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாக சைதன்யா கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க உள்ளனர். இந்த   படத்தை பவன்குமார் வழங்கவுள்ளார். அப்பூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு மே மாதம் 12 ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் திரைப்படங்களில் வெளியாக உள்ளது.

நேர்மையான  போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா சிவா என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு 'A Venkat Prabhu Hunt' என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read | திருமணமாகி ஒரு மாதம்.. கௌதம் கார்த்திக்கை டேக் செய்து மஞ்சிமா நெகிழ்ச்சியான பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

Naga Chaitanya Venkat Prabhu Custody Release Date

People looking for online information on Custody, Custody Release Update, Naga chaitanya, Venkat Prabhu will find this news story useful.