பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றுவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன், விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை சொல்லும் டாஸ்க் கடந்த வாரங்களில் நடைபெற்று வந்தது. இதில் மலேசிய தமிழர் நடியா சாங் என்கிற பெண் பிரபல போட்டியாளராக இருக்கிறார். இவர் தன்னுடைய கதையை குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி நடியா சாங் தன்னுடைய தாயாரால் சிறுவயதிலிருந்தே கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், குறிப்பாக போலீசாரை விட்டு தன் தாயார் தன்னை அடிக்க வைத்ததாகவும், மிகச் சிறிய வயதிலேயே தான் வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதாகவும், அப்படி ஹோட்டலில் வேலை செய்யும்போது சாங் என்பவரை சந்தித்து அவரை திருமணம் செய்து, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பலரும் இந்த கதையை கேட்டு உருகி இருந்தாலும்கூட பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பலரும் நடியாவின் கதை தங்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்று கமல்ஹாசனிடம் வார இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றனர். இதேபோல் மலேசியத் தமிழர் ஒருவர் ‘நடியா சொல்வதெல்லாம் பொய்’ என்று பரபரப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து பல கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார். அதன்படி மலேசியா தமிழர்களை நடியா சாங் அசிங்க படுத்துவதாகவும், குறிப்பாக ஆண்களையே பிடித்தாலும் கூட போலீசார் அழைத்துச் சென்று மரியாதையாக நடத்தும் போது, ஒரு பெண்ணை எப்படி போலீசார் அடிப்பார்கள்? அந்த அளவுக்கு நடியா என்ன தவறு செய்தார்? என்றும் கேட்டுள்ளார்.
குறிப்பாக மலேசியாவில், அதுவும் ஹோட்டலில் மிகச் சிறிய வயது உள்ளவர்களை எப்படி வேலைக்கு அமர்த்துவார்கள்? இதெல்லாம் நம்பும்படியாக இருக்கிறதா? என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் கடந்த சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கிய முகின் ராவ் ஒரு மலேசிய தமிழர் என்றும் அவருடைய குடும்ப பின்னணி அனைவரையும் கலங்க வைத்ததை அடுத்து, அதே பாணியை நடியாவும் தொடர்கிறார் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர், நடியா சாங் படிக்காமல் எப்படி மிகப்பெரிய அலுவலகத்தில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதிக்க முடியும் என்றும் கேள்வி கேட்டிருக்கிறார். அந்த மலேசிய தமிழர் பேசியுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக இருக்கிறது. இந்த வீடியோவை இணைப்பில் காணலாம்.