தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக நடந்த அவசர செயற்கு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் நியமிக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, சங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்க அவரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் ஒப்படைத்துள்ளார். அந்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டதுடன் விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் தேர்தி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.