சாதனை மேல் சாதனை படைக்கும் தல அஜித் நடிக்கும் "வலிமை" படத்தின் "நாங்க வேற மாரி" பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில் படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்தனர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Naanga Vera Maari Song Breaking Records at Youtube

People looking for online information on Ajith Kumar, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.