பிரபல முன்னாள் அதிமுக அமைச்சர் தம்முடன் குடும்பம் நடத்திவிட்டு இப்போது ஆபாச படங்களை காட்டி மிரட்டுவதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில துணை நடிகையாக நடித்து இருப்பவர் சாந்தினி. இவர்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி 5 ஆண்டுகள் குடும்ப நடத்தியதாகவும் பின்னர் ஆபாச படங்களை காட்டி தற்போது மிரட்டுவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனை அடுத்து அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அப்போது தகவல் தொடர்புதுறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் பதவியும் நீக்கப்பட்டது.
தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதவியில் இல்லை. இந்த நிலையில்தான் தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்திருக்கிறார். அத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது அந்தரங்க புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் விடுவதாக மிரட்டுவதாகவும் கூலிப்படை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டதாக சாந்தினி தெரிவிக்கிறார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சாந்தினி, “என் பெயர் சாந்தினி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தேன். பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து சுற்றுலாத்துறையில் இயங்கி வந்த போது பரணி என்கிற தனியார் மக்கள் தொடர்பாளர் ஒருவருடனான அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் வியாபார ரீதியாக அமைச்சரை சந்தித்த பின்னர் அந்த வியாபார உறவு நட்பாக மாறுகிறது. அவரோ தன் வீட்டில் தன் மனைவி தன்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றும் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறினார். நானும் ஒரு அமைச்சர் பொய் சொல்லமாட்டார் என்று அவரை நம்பி அடிக்கடி மினிஸ்டர் பங்களாவுக்கு செல்வதும் வருவதுமாக இருந்தேன். பின்னர் போலீசார் என்னை அங்கு செல்லக்கூடாது என்று கூறியதை அடுத்து நாங்கள் இருவரும் தனியாக 5 வருடங்கள் குடும்பம் நடத்தினோம். என்னை திருமணம் செய்த கொள்வதாக அவர் வாக்கும் அளித்திருந்தார். ஆனால் இடையில் மினிஸ்டர் பதவியை இழந்ததை அடுத்து தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறி என்னுடனான திருமணத்தை தவிர்த்தார்.
ஆனால் அதுபற்றி இப்போது கேட்டால் கடைசி இரண்டு வாரங்கள் முன்பு வரை என்னை அவர் அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, மலேசியாவில் இருக்கும் என்னுடைய குடும்பத்தை கேங்ஸ்டர்களை வைத்து மிரட்டுவதுமாக இருக்கிறார். என் வீட்டுக்கும் கேங்க்ஸ்டர்களை அனுப்புகிறார். ஒரு முன்னாள் அமைச்சர் எனக்கு செய்த மகா மட்டமான ஒரு துரோகம் இது. தமிழ்நாடு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும். அவர் அனுப்பிய புகைப்படங்கள், மிரட்டல் மெசேஜ்கள், வாய்ஸ் ரெக்கார்டுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மருத்த ரீதியாகவும் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாக்கி இருக்கிறார்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2019 தமிழக முதல்வர் தலைமையிலான சட்டமன்ற அமைச்சர்கள் உரை நிகழ்ச்சியில் அப்போதைய அமைச்சர் மணிகண்டனின் மனைவி ஸ்தானத்தில் சாந்தினி பங்கேற்றதும், இதேபோல் டெல்லியில் நடந்த தமிழக அமைச்சர்கள் கூட்டம் உட்பட பல முக்கிய இடங்களுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சாந்தினியுடன் சென்றதாகவும் சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.