தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.
இந்த ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நம்ம வீட்டு ப்ரின்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மகன் சார்பில் ஒரு ஓவியம் பரிசளிக்கப்பட்டது. அந்த ஓவியத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் & மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இணைந்து இருப்பது போல ஓவியம் அமைந்துள்ளது. இந்த ஓவியத்தை நடிகர் சத்யராஜ் சிவகார்த்திகேயனுக்கு வழங்கினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக பணிபுரியும் வருவாய் அனைத்தையும் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "எப்படியாவது ஒரு பாடலை பாடலாசிரியர் நா. முத்துக்குமார் போல எழுதி விட வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளது" என கூறியுள்ளார்.