இயக்குநர் மிஷ்கின் இசையில் உருவாகும் புதிய திரைப்படம்!!.. வெளியான அடுத்த கட்ட அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாருதி பிலிம்ஸ் R.இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”.

Mysskin turns composer for Savarakathi directors Devil update
Advertising
>
Advertising

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” எனும் இந்த படத்தின் படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒளிப்பதிவை கார்த்திக் முத்துக்குமார் மேற்கொள்ள, எடிட்டங்கை இளையராஜா கவனித்துக்கொண்டுள்ளார். கலை இயக்குநராக மரியா கெர்ளி பணிபுரிந்துள்ள இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இயக்குநர் மிஷ்கின் திரைப்படம் இயக்குவதையும் தாண்டி, சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களுக்கு எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார்.

இதேபோல் கள்ளப்படம் எனும் திரைப்படத்தில், ‘வெளைக்கார ராணி’ எனும் பாடலையும்,  அஞ்சாதே படத்தில் ‘கண்ணதாசன் காரக்குடி’ பாடலையும் பாடியிருந்தார். இந்நிலையில் சவரக்கத்தி இயக்குநரின் அடுத்த படமான டெவில் திரைபடத்தில் இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கிறார். “டெவில்” படத்தின் படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்துள்ளது.

Tags : Mysskin, Devil

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin turns composer for Savarakathi directors Devil update

People looking for online information on Devil, Mysskin will find this news story useful.