BREAKING: சிவகார்த்திகேயனை இயக்கும் ‘மண்டேலா’ மடோன் அஸ்வின்… வில்லனாக பிரபல இயக்குனரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | “சூர்யா Entry சூப்பர்…. Pure Fanboy சம்பவம்”… ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு? FDFS பார்த்த Fans கருத்து

டாக்டர், டான் வெற்றி…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த நிலையில் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

சிவகார்த்திகேயன் 20

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்…

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதையடுத்து மண்டேலா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவலின் படி இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் அருண் விஸ்வா தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அருண் விஸ்வா தற்போது உருவாகி வரும் SK 20 படத்தில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | ”பீஸ்ட் to விக்ரம்… எல்லாம் உங்களால்தான்… Miles to Go…” – அனிருத்தின் நெகிழ்ச்சிப் பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin to play antagonist in Sivakarthikeyan next movie

People looking for online information on Antagonist, சிவகார்த்திகேயன், டாக்டர், டான், Mysskin, Sivakarthikeyan, Sivakarthikeyan next movie will find this news story useful.