MYSSKIN : ‘தீவிர ரசிகருப்பா’.. இளையராஜா பாட்டை துள்ளி எழுந்து பாடிய மிஷ்கின்.. வைரல் ஆகும் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கின் திரைப்படம் இயக்குவதையும் தாண்டி, சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களுக்கு எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார்.

Advertising
>
Advertising

2006 ஆம் ஆண்டு  நரேன், பாவனா நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின்,  இதைத் தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியவர். தன் படங்களில் அன்பையே பிரதான அறமாக முன்வைக்க விரும்புவதாக, பல இடங்களில் மிஷ்கின் வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநரானாலும், மிஷ்கின், நடிகராக சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.   பாடகராக அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி,  துப்பறிவாளன் ஆகிய படங்களில் பாடவும், சில படங்களில் பாடல் எழுதவும் செய்துள்ளார். குறிப்பாக கள்ளப்படம் எனும் திரைப்படத்தில், ‘வெளைக்கார ராணி’ எனும் பாடலையும்,  அஞ்சாதே படத்தில் ‘கண்ணதாசன் காரக்குடி’ பாடலையும் பாடியிருந்தார். இந்நிலையில் சவரக்கத்தி இயக்குநரின் அடுத்த படமான டெவில் திரைபடத்தில் இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கிறார். “டெவில்” படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக  நிறைவடைந்துள்ளது.

இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 -ஆம் பாகம் படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

திரைப்படங்களை பொறுத்தவரை பெரும்பாலும் தமது திரைப்படங்களுக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரையே இசையமைப்பாளராக கொண்டிருப்பார் மிஷ்கின். தமது திரைப்படங்களின் மைய ஆதாரமாக இசைஞானி இளையராஜாவின் இசையும் இருப்பதாக அடிக்கடி குறிப்பிட்டுள்ள மிஷ்கின், இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதை தற்போது மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஆம், இயக்குநர் மிஷ்கின், இளையராஜாவின் பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடக்கூடிய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது, அந்த வீடியோவில் பரவசமான இயக்குநர் மிஷ்கின், இளையாராஜாவின் துள்ளி எழுந்தது பாட்டு பாடலை கிட்டத்தட்ட இளையராஜா பாணியிலேயே பாட முற்படுகிறார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

1985 ஆம் ஆண்டு முரளி, நளினி நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தில் இளையராஜா இசையில் இந்த பாடல் இடம் பெற்றது என்பதும் இந்த பாடலை இளையராஜா பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin Sings Ilaiyaraaja 80S Song Video துள்ளி எழுந்தது பாட்டு

People looking for online information on Ilaiyaraaja, Illayaraja, Mysskin will find this news story useful.