வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது என தகவல்கள் கூறப்பட்டன.
இதற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தில் நடிகை த்ரிஷா, நடிகை, ப்ரியா ஆனந்த், விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு காஷ்மீர் சென்றனர். லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் சுமார் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் குளிர்வெப்பநிலையில் நடப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், இன்று முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Also Read | “நான் நடிச்சது நிஜ கேரக்டர்..! கைதாகி வெளிய வந்துட்டாங்க.. அவங்க பேர் கூட ..”.. Bakasuran லயா Exclusive