மிஷ்கின், சைக்கோ பற்றி விளக்கம் - ''MASTRUBATE பண்ணும் போது மன்னிக்கலாம்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்களது சமூக வலைதளபக்கங்களில் ஒரு சில சந்தேகங்களை முன் வைத்தனர்.

இதனையடுத்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குநர் மிஷ்கின் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''இந்த படம் எழுதணும்னு ஒரு பத்து வருடங்களாக எண்ணம் இருந்தது. மான்ஸ்டருக்குள்ள நடக்குற போராட்டம். கடைசியா அந்த மான்ஸ்டருக்குள்ள இருந்து ஒரு குழந்தை வெளிய வருது. அது தான் இந்த படத்தினுடைய முக்கிய விஷயமாக நான் பார்க்கிறேன்.

அங்க ஒரு Controversy உருவாகுது. அதெப்படி ஒரு கொலைகாரனை மன்னிக்கலாம். மன்னிக்கிறதுனு முடிவு பண்ணிட்டிங்கனா, ஒரு குழந்தைய மன்னிக்கலாம். ஒரு பெரிய மிருகத்தையும் மன்னிக்கலாம். அது மனதினுடைய ஆழமும் அகலமும் பொறுத்தது. இது லாஜிக்கலாம் பார்க்க தேவையில்லை.

ஒரு குழந்தை தப்பு பண்ணா மன்னிக்கலாம். ஒருவன் Mastrubate பண்ணும் போது மன்னிக்கலாம். எனக்கு 16 வயசு இருக்கும் போது செக்ஸ் புக் படிச்சிட்டுருக்கும் போது, எங்க அம்மா வந்ததும், அந்த புக்கை டேபிளின் இடையில் போட்டுட்டு போய்ட்டேன். நான் திரும்பி வந்து பார்க்கும் போது, அந்த டேபிளில் செக்ஸ் புக் இருந்தது.  அப்போது தான் எங்க அம்மாவை நான் உயர்வாக பார்த்தேன்'' என்றார்.

சைக்கோ படத்துக்கு இசைஞானி இளையராஜாவின் இசையும், தன்வீர் மிர்ரின் ஒளிப்பதிவும் பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ், ராஜ்குமார், இயக்குநர் ராம், சிங்கம் புலி, ஷாஜி, பவா செல்லத்துரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மிஷ்கின், சைக்கோ பற்றி விளக்கம் - ''MASTRUBATE பண்ணும் போது மன்னிக்கலாம்'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin Decodes Udhayanidhi Stalin, Ilaiyaraaja, Nithya Menon's Psycho

People looking for online information on Ilaiyaraaja, Mysskin, Udhayanidhi Stalin will find this news story useful.